குடிநீர் குழாயில் உடைப்பை சரிசெய்த வாலிபர்கள்
குடிநீர் குழாயில் உடைப்பை வாலிபர்கள் சரிசெய்தனர்.
நொய்யல்,
வேட்டமங்கலம் ஊராட்சி சார்பில் மரவாபாளையம் காவிரி ஆற்றில் வட்டை கிணறு அமைத்து அந்த கிணற்றில் இருந்து மின்மோட்டார் பொருத்தி அதன் மூலம் வேட்டமங்கலம் ஊராட்சி பகுதிகளுக்கு சீரானகுடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் மரவா பாளையத்திலிருந்து காந்திநகர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மரவாபாளையத்தில் இருந்து செல்லும் குடிநீர் குழாய் காந்திநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வழியாக செல்கிறது.அந்த வழியாக செல்லும் குடிநீர் குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டு குடிநீர் குழாய் மூலம் ஏராளமான குடிநீர் வெளியாகி வீணாகி வந்தது. இதுகுறித்து தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கப்படாததால் அந்த கல்லூரி பகுதியில் இருந்த வாலிபர்கள் ஒன்று சேர்ந்து குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு குடிநீர் வெளியேறுவதை தடுத்தனர்.