சிமெண்டு ஆலைக்கு கொண்டு வரப்பட்ட மூலப்பொருளில் கலப்படம்; 8 பேர் கைது


சிமெண்டு ஆலைக்கு கொண்டு வரப்பட்ட மூலப்பொருளில் கலப்படம்; 8 பேர் கைது
x

சிமெண்டு ஆலைக்கு கொண்டு வரப்பட்ட மூலப்பொருளில் கலப்படம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே ரெட்டிபாளையம் வி.கைகாட்டியில் அல்ட்ராடெக் சிமெண்டு ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு தேவையான மூலப்பொருட்களான நிலக்கரி, மணிக்கரி போன்றவை வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் சென்னையில் உள்ள துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து லாரிகள் மூலம் வி.கைகாட்டியில் உள்ள சிமெண்டு ஆலைக்கு கொண்டு வரப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வந்த ஒரு லாரியில் மணிக்கரியில் கலப்படம் செய்யப்பட்ட தரம் குறைந்த மூலப்பொருட்களை சேர்த்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை ஆய்வு செய்த சிமெண்டு ஆலை நிர்வாக அதிகாரிகள் கலப்படம், மூலப்பொருளில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

மேலும் அந்த பொருளை லாரியில் ஏற்றிக்கொண்டு வரும்போது வழியில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதையும் கண்டுபிடித்தனர். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில், அந்த சிமெண்டு ஆலையின் மேற்பார்வையாளர் நல்லேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதையடுத்து மூலப்பொருளில் கலப்படம் செய்து லாரியில் கொண்டு வந்த தஞ்சாவூரை சேர்ந்த டிரைவர் செந்தில் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த பிரேம், சங்கர், சதீஷ்குமார், ஹரிஹரன் மற்றும் அரியலூரை சேர்ந்த சுப்பிரமணியன், குமார், இளையராஜா ஆகிய 8 பேரை கைது செய்தனர்.


Next Story