மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து ஆலோசனை
மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து ஆலோசனை நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர்கள் சரவணன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் வரவேற்று பேசினார். கூட்டத்தை தொடர்ந்து மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்களை மகளிர் உரிமை திட்ட செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்து இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார். மேலும் அந்தந்த பகுதிகளில் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பம் வழங்க வரும் பயனாளிகளுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவும் அறிவுறுத்தினார். இதில் ஒன்றிய அலுவலர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.