பெயிண்டர்கள் ஓவியர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்
சாயல்குடி,
சாயல்குடியில் தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் முனியசாமி தலைமை தாங்கினார். நகர் தலைவர் விஜி, மாவட்ட தலைவர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாதம் முதல் வார ஞாயிற்றுக்கிழமை சங்க கூட்டம் நடைபெறும், அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்வது, உச்சிப்புளி பகுதியை சேர்ந்த பெயிண்டர் கடந்த வாரம் தவறி விழுந்து இறந்ததற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது, மேலும் அவரது குடும்பத்திற்கு உறுப்பினர்கள் நிதி உதவி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் பாலமுருகன், பொருளாளர் தங்க பிரபு, துணை தலைவர் மூர்த்தி, மாவட்ட அமைப்பு செயலாளர் குமரேசன் மற்றும் கிளை தலைவர்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story