வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்


வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்
x

திண்டுக்கல்லில், வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் வக்கீல் சங்கத்தினர் 3 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதனால் நீதிமன்றங்களில் முக்கிய வழக்குகளின் விசாரணை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வக்கீல் சங்க தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் குமரேசன், பொருளாளர் காமாட்சி, துணை தலைவர் ரவிகண்ணன், இணை செயலாளர் பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மகிளா கோர்ட்டு நீதிபதியை பணியிட மாறுதல் செய்ய வேண்டும். மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுவதை தடுக்க வேண்டும். உரிமையியல் கோர்ட்டுகளில் அவசர வழக்காக தாக்கல் செய்யும் மனுக்களை உடனே கோப்புக்கு எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் கோஷமிட்டனர்.


Next Story