கருப்பு மண் அரவை மில்லால் பாதிப்பு


கருப்பு மண் அரவை மில்லால் பாதிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2023 1:00 AM IST (Updated: 25 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

சேந்தமங்கலம்:-

சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டி கிராமத்தில் கருப்பு மண்ணில் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்கும் அரவை மில் புதிதாக தயாராகி வருகிறது. ஏற்கனவே அங்கு சில அரவை மில்கள் இயங்கி வருகின்றன. இந்த அரவை மில்களால் அங்கு சுற்றுச்சூழல், விவசாய நிலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த மில்களை தடை செய்ய வேண்டும் என்று சேந்தமங்கலம் பகுதி பொதுமக்கள் ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பனிடம் மனு கொடுத்தனர். அவர், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பிறகு மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story