தேனி சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4 நாட்களுக்குப் பின் வனத்துறை அனுமதி


தேனி சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4 நாட்களுக்குப் பின் வனத்துறை அனுமதி
x

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4 நாட்களுக்குப் பிறகு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

தேனி,

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

சுருளி அருவி வனப்பகுதியில் அமைந்துள்ளதால், அவ்வபோது காட்டு யானைகள் அருவிக்கு அருகே வந்து செல்கின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களாக வனப்பகுதியில் இருந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அருவி அருகே முகாமிட்டதால், சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்த நிலையில் அருவிக்கு வந்த காட்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பியதால், சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4 நாட்களுக்குப் பிறகு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனிடையே இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் குவிந்தனர்.



Next Story