அகஸ்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு


அகஸ்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு
x

மறையூர் அகஸ்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் அருகே மறையூர் கிராமத்தில் அகஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு விழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், கும்ப அலங்காரம், அஷ்ட பந்தன, யாகசாலை பிரவேசம் உள்ளிட்டவை நடந்தது. இதை தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்படாகி அகஸ்தீஸ்வரர், அம்மன், விநாயகர், சுப்ரமணியர் உள்ளிட்ட கோவில்களின் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.பாதுகாப்பு பணியில் குத்தாலம் போலீசார் ஈடுபட்டனர்.


Next Story