ஆக்கி, நடை போட்டிகள்:விழுப்புரத்தில் நாளை நடக்கிறது


ஆக்கி, நடை போட்டிகள்:விழுப்புரத்தில் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 28 Aug 2023 12:15 AM IST (Updated: 28 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஆக்கி, நடை போட்டிகள் நாளை நடக்கிறது

விழுப்புரம்


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 29-ந் தேதியன்று மேஜர் தயான்சந்த்தின் பிறந்த நாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தேசிய விளையாட்டு தினத்தன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒரு விளையாட்டு போட்டிகள் நடத்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு ஆக்கி விளையாட்டு போட்டிகள் மற்றும் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 1 கிலோ மீட்டர் தூரம் நடைபோட்டிகள் நடைபெறுகிறது.

இப்போட்டிகள் நாளை காலை 9 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறும். போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இப்போட்டிகள் தொடர்பான இதர விவரங்களை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (7401703485) தொடர்பு கொண்டு விவரத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.


Next Story