தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்த ஒப்பந்தம் - முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து


தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்த ஒப்பந்தம் - முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து
x

தொழிற்பயிற்சி நிலையங்கள், முன்னனி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து சுமார் ரூ.2,877 கோடி செலவில் தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்பட உள்ளன.

சென்னை,

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கும், புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதன்படி தொழிற்பயிற்சி நிலையங்கள், முன்னனி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து சுமார் ரூ.2,877 கோடி செலவில் தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்பட உள்ளன. இதன் மூலம் ரோபோட்டிக்ஸ், இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன், இண்டஸ்ட்ரியல் பெயிண்டிங், அட்வான்ஸ்ட் வெல்டிங் உள்ளிட்ட நவீன திறன் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.

மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலமாக தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story