10¼ டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம்


10¼ டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம்
x

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 10¼ டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.

திருப்பூர்

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 10¼ டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருள்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலங்களில் முத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டம் கொல்லன்கோவில், சிவகிரி, அஞ்சூர் கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வேளாண் விளை பொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.

அதன்படி நேற்று காலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் 15 ஆயிரத்து 595 தேங்காய்களை (6,947 கிலோ) ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.25.85-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.35-க்கும் ஏலம் விடப்பட்டது.

தேங்காய் பருப்பு ஏலம்

மேலும் 80 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.85.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.30-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. 9 மூட்டைகள் சிவப்பு ரக எள் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ அதிகபட்சமாக ஒரே விலையாக ரூ.93.20-க்கு ஏலம் விடப்பட்டது.

மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 6 ஆயிரத்து 607 தேங்காய்களும், 11 தேங்காய் பருப்பு மூட்டைகளும், ஒரு மூட்டை எள்ளும் கூடுதலாக கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் தேங்காய் ஒரு கிலோவிற்கு ரூ.1.60-ம், தேங்காய் பருப்பு ஒரு கிலோவிற்கு ரூ.1.75- கூடுதலாகவும், எள் கிலோவிற்கு ரூ.17.10 குறைவாகவும் விவசாயிகளுக்கு கிடைத்தது.

10¼ டன் ஏலம்

தேங்காய், தேங்காய் பருப்பு, எள் மூட்டைகள் 10¼ டன் அளவில் மொத்தம் ரூ‌.4 லட்சத்து 52 ஆயிரத்து 373-க்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் விடப்பட்டது.

இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இந்த தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story