விவசாய தொழிலாளர்கள் விழிப்புணர்வு பிரசாரம்
விவசாய தொழிலாளர்கள் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தினர்.
திருவெறும்பூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் டெல்லியில் வருகின்ற ஏப்ரல் 5-ந்தேதி உழைப்பாளி மக்களின் பேரணி நடைபெற உள்ளது. இதனை விளக்கி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பில் திருவெறும்பூர் கடைவீதியில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டியு. தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்வி தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட தலைவர் கே.சி.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் ரூ.26 ஆயிரம், ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ஒப்பந்த முறை ஒழிக்கப்பட்டு ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தர படுத்தப்பட வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளையும், மின்சார சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.