திருவெண்ணெய்நல்லூரில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிட பூமி பூஜை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்


திருவெண்ணெய்நல்லூரில்    துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிட பூமி பூஜை    பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
x

திருவெண்ணெய்நல்லூரில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடம் கட்டுமான பணியை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூரில் வேளாண்மைத்துறை சார்பில் ரூ.38 லட்சம் செலவில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்புக்கிடங்கு கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. இதையொட்டி நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு வேளாண்மைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். விழுப்புரம் வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம், பேரூராட்சி துணை தலைவர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி வேளாண்மை இயக்குனர் பிரேமலதா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து துணை வேளாண்மை விரிவாக்க மையம், விதை சேமிப்புக்கிடங்கு கட்டிடம் கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் பூக்கடை கணேசன், கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் சித்ரா, திருக்கோவிலூர் தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கிருஷ்ணராஜ், நகர பொருளாளர் சையத் நாசர், இளைஞரணி சுலைமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story