காட்டுமன்னார்கோவிலில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


காட்டுமன்னார்கோவிலில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

காட்டுமன்னார்கோவிலில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் பொன்னம்பலம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரகாஷ், விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் ஜாக்கிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சியில் வழங்கப்படும் 100 நாள் வேலைத்திட்டத்தில் அனைவருக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்கிட வேண்டும், ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் புதிய வீடு கட்டும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் விவசாய தொழிலாளர் சங்க வட்ட துணைத்தலைவர் பூச்சந்திரன், கட்டுமான தொழிலாளர் சங்க வட்ட பொறுப்பாளர் விமலக்கண்ணன், தனபால், மணிகண்டன், இதாயத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story