சமையல் தொழிலாளி கொலையில் அ.தி.மு.க. நிர்வாகி கைது


சமையல் தொழிலாளி கொலையில் அ.தி.மு.க. நிர்வாகி கைது
x

வானமாமலை

களக்காடு அருகே சமையல் தொழிலாளி கொலையில் அ.தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், யாதவர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகன் (வயது 43). இவருக்கு செல்வி (40) என்ற மனைவியும், சுடலைமுத்துக்குமார் (12), அருண்குமார் (11) ஆகிய மகன்களும் உள்ளனர். முருகன் சமையல் தொழிலாளி ஆவார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் அவரது நண்பருக்கு ஆதரவாக செயல்பட்டதில் ஏற்பட்ட முன்விேராதம் காரணமாக கடந்த மாதம் முருகன் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக அவருடைய மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில் களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சிங்கிகுளத்தை சேர்ந்த ஐகோர்ட் ராஜா (34), ராமச்சந்திரன் (43), கீழதேவநல்லூரை சேர்ந்த இசக்கிப்பாண்டி (32), இசக்கிமுத்து (28) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் கோதைசேரியை சேர்ந்த சுரேஷ் என்ற சொக்கலிங்கம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரணடைந்தார். தொடர்ந்து தலைமறைவாக இருந்த அ.தி.மு.க நிர்வாகி வானமாமலை என்ற சுரேசை, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் வானமாமலையை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணைக்கு பின் அவர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story