அதிமுக வழக்கு: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு


அதிமுக வழக்கு: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
x

அதிமுக வழக்கில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓபிஎஸ் தரப்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடக்கிறது என்றும் எங்கள் தரப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் எனவும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

இறுதியில் மேல்முறையீட்டு மனுவை ஏப்ரல் 20-ம் தேதி மதியம் 2.15 மணிக்கு விசாரிப்பதாக இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிரான வழக்கில் இறுதி விசாரணை ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், இடைக்கால உத்தரவு பிறபித்தால் சிக்கலை ஏற்படுத்தும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

1 More update

Next Story