அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது-


அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது-
x
தினத்தந்தி 20 April 2023 6:18 PM IST (Updated: 20 April 2023 6:54 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் துவங்கியுள்ளது.

சென்னை,

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் துவங்கியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக நாடளுமன்ற பூத் கமிட்டி அமைப்பது, கர்நாடக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடைபெறலாம் என்று தெரிகிறது. சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலை முழுவதும் நிரந்தர பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி பேனர்களை கட்சி நிர்வாகிகள் வைத்துள்ளனர்.


Next Story