அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு 12 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அனைவரும் தயாராக இருந்தால் விசாரணையை நடத்த நாங்களும் தயராக இருக்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.
புதுடெல்லி,
எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லாது என்று ஓ.பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
கட்சிகள் விதிகளில் செய்யப்பட்ட மாற்றத்தை வழக்கை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் பரிசீலிக்க மறுப்பதாகவும் இடைக்கல உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆஜராக வேண்டிய மூத்த வழக்கறிஞர் இல்லாததால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசரணையை வரும் 12 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.
தேர்தல் ஆனையத்தின் நடவடிக்கை தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுங்கள் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.