செயல்படாத கட்சியாக அதிமுக உள்ளது: பழனிச்சாமி விரக்தியின் உச்சத்தில் உள்ளார்: டிடிவி தினகரன் பேட்டி
அதிமுக கட்சி தற்போது செயல்படாத கட்சியாக உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
அமமுக கட்சி சுதந்திரமாக இயங்கக்கூடியது ஆகும். என்னிடம் எடப்பாடி பழனிச்சாமியிடன் கூட்டணி வைப்பீர்களா என கேட்கிறீர்கள்.
அதிமுக கட்சி தற்போது செயல்படாத கட்சியாக உள்ளது. தலை இல்லாத நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அவர் அம்மாவின் தொண்டரே இல்லை என்பதை வெளிப்படுத்துகிறார். நான் எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைப்பேன் என்று அப்போதும் கூறியது கிடையாது.
திமுக வை வீழ்த்தவேண்டும் என்றால், அம்மாவின் தொண்டர்கள் ஒரு அணியாக ஒன்றுதிரள வேண்டும். அவ்வாறு ஒன்றுகூடி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றிபெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story