அதிமுக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது - டிடிவி தினகரன் பேச்சு


அதிமுக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது - டிடிவி தினகரன் பேச்சு
x

அதிமுக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.



அதிமுக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது - டிடிவி தினகரன் பேச்சு

தர்மபுரி,

தர்மபுரியில் அமமுக சார்பில் ஒருங்கிணைந்த மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் டிடிவி தினகரன் பேசியதாவது:-

அதிமுக பொதுக்குழுவுக்கு வந்தவர்களுக்கு பணம் தரப்பட்டதாக எனக்கு வந்த தகவலை தெரிவித்தேன். இது தொடர்பாக கே.பி.முனுசாமி என் மீது மான, நஷ்ட வழக்கு தொடுக்கப்படும் என்கிறார். வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக உள்ளேன்.

ஜெயலலிதாவின் கொள்கைகளை, லட்சியங்களை நிறைவேற்ற அமமுக தொடர்ந்து செயலாற்றி வருகிறது. நான் தனிக்கட்சி தொடங்கி விட்டேன். அதிமுக-வில் பொதுக்குழு கூட்டம், பொதுச்செயலாளர் தேர்வு நடந்தால் என்ன? நடக்காவிட்டால் எனக்கென்ன?

அதிமுக என்ற இயக்கத்துக்கு ஒற்றை அல்லது இரட்டை என எப்படியான தலைமை வந்தாலும் கூட, இனி அந்தக் கட்சி தேறாது. அதிமுக இயக்கம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு சோதனைகளை அனுபவித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story