மாநிலங்களவை வேட்பாளராக சி.வி.சண்முகம் அறிவிப்பு: அ.தி.மு.க. கூட்டத்தில் கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
மாநிலங்களை வேட்பாளராக மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் அறிவிக்கப்பட்டதற்கு விழுப்புரத்தில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் 35-வது வார்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எழில் நகரில் நடைபெற்றது. இதற்கு நகரமன்ற உறுப்பினர் ஆவின் செல்வம் தலைமை தாங்கினார். விழுப்புரம் நகர செயலாளர் பசுபதி கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்தும், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், மாவட்ட செயலாளர் சி.வி. சண்முகத்தை மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்ததற்கு கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சுப்பிரமணியன், திருநாவுக்கரசு, குணசேகரன், சம்பந்தம், செல்வராஜ், சபாபதி, சத்யா, உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநிலங்களவை வேட்பாளர் அறிவிப்பு
இதேபோல் விழுப்புரம் வடக்கு நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரம் மேலத்தெருவில் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் வண்டி மேடு ராமதாஸ் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், நகர அவை தலைவர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகத்தை அறிவித்ததற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்களுக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் ராஜ்குமார், சிவன், பாக்கியலட்சுமி, துணை செயலாளர் லட்சுமி குணசேகர், இணை செயலாளர் ஹமுனிருஷா சண்முகம், நகரமன்ற உறுப்பினர் கோல்டு சேகர், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் சம்சுதீன் சேட், வட்ட செயலாளர் ராஜாராம் ,வட்ட இளைஞரணி செயலாளர் கார்த்தி, நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சங்கிலித்தேவன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.