கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.
சென்னை,
தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து நடந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள், உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் மறைவுக்காக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று முதல் 13-ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரில் பங்கேற்க இன்று காலை முதலே உறுப்பினர்கள் வரத்தொடங்கி உள்ளனர். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.
சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் இதுவரை முடிவு எடுக்காத காரணத்தால் தங்களின் எதிர்பபை பதிவு செய்யும் விதமாக அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.