சொத்துவரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து திண்டிவனம், விழுப்புரத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
சொத்துவரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து திண்டிவனம், விழுப்புரத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டிவனம்,
ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் தி.மு.க. அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து திண்டிவனம் தாலுகா அலுவலகம் அருகில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு அர்ஜூனன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திண்டிவனம் நகர செயலாளர் முன்னிலை வகித்தார். கோவை கல்யாணசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இதில், முன்னாள் நகரமன்ற தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் தளபதி ரவி, அரசு ஒப்பந்ததாரர் டி.கே. குமார், வடபழனி, கவுன்சிலர்கள் சரவணன், ஜனார்த்தனன், கார்த்திக், முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மரக்காணம் மேற்கு நடராஜன், ஒலக்கூர் ( கிழக்கு) பன்னீர், (மேற்கு) கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏழுமலை நன்றி கூறினார்.
விழுப்புரம்
இதேபோல், விழுப்புரம் நகர அ.தி.மு.க. சார்பில் நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட அவைத்தலைவர் கண்ணன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். விழுப்புரம் தெற்கு நகர செயலாளர் பசுபதி முன்னிலை வகித்தார். வடக்கு நகர செயலாளர் வண்டிமேடு ராமதாஸ் அனைவரையும் வரவேற்றார். இதில் ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, பேட்டை முருகன், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், நகரமன்ற கவுன்சிலர்கள் கோல்டுசேகர், கோதண்டராமன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் டாக்டர் முத்தையன், துணை செயலாளர் திருப்பதி பாலாஜி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், நகர அவைத்தலைவர் பால்ராஜ், வக்கீல்கள் சுபாஷ், பாக்யராஜ், ஸ்ரீதர், தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல பொருளாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர். முடிவில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.