கள்ளக்குறிச்சியில்அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


கள்ளக்குறிச்சியில்அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி


மதுரை விமான நிலையத்தில் அ.ம.மு.க. பிரமுகர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட 5 பேர் மீது அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில், பொய் வழக்கு பதிவு செய்ததாவும், தி.மு.க அரசை கண்டித்தும் நேற்று அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ. செந்தில்குமார், முன்னாள் எம்.பி. காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அழகுவேல்பாபு, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, முன்னாள் அமைச்சர் மோகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போட்டதாக கூறி, தி.மு.க. அரசை கண்டித்தும், தமிழக காவல்துறையை கண்டித்தும் பேசினர். ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு கண்டனம் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைய தலைவரும், கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளருமான ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், அய்யப்பா, அய்யம்பெருமாள், தியாகதுருகம் நகர செயலாளர் ஷியாம்சுந்தர், மாவட்ட அவை தலைவர் பச்சையாப்பிள்ளை, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனிவாசன், பொருளாளர் வெற்றிவேல், துணைச் செயலாளர் வினோத்குமார், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர செயலாளர் பாபு நன்றி கூறினார்.


Next Story