கட்சி தலைமை அலுவலகம் முன்பு குவியும் அதிமுக தொண்டர்கள்..!


கட்சி தலைமை அலுவலகம் முன்பு குவியும் அதிமுக தொண்டர்கள்..!
x

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் அவகாசம் நிறைவடைகிறது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட நேற்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான முதல் நாளான நேற்று காலை 10 மணிக்கு வேட்பு மனுதாக்கல் தொடங்கியது.

எடப்பாடி பழனிசாமி நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முதல் நாளான நேற்று 37 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய இன்று மாலை 3 மணியுடன் அவகாசம் நிறைவடைகிறது. இதனால் இன்று நூற்றுக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் மட்டும் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதால் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகம் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது.

1 More update

Next Story