எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்


எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்
x

எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர்

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் வேலூர் மண்டல கோரிக்கை மாநாடு வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளியில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க மாநில தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சேரலாதன், துணைத்தலைவர்கள் ரவி, ஜெகஜோதி, இணைச்செயலாளர் வில்சன், பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராஜீவ்காந்தி வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் கண்ணன், மாநில செயலாளர் மோகனமூர்த்தி, பொதுசுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சரண்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

மாநாட்டில், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய மாற்றத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் வருங்கால வைப்புநிதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும், எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட பொருளாளர் அபிதா நன்றி கூறினார்.


Related Tags :
Next Story