எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர்
கரூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கம் சார்பில் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமல்தாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைத்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாரபட்சமின்றி 10 சதவீதம் ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story