சென்னையில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு
சென்னையில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. திருச்சி, மைசூரு, கொச்சி, பாட்னா, வாரணாசி ஆகிய இடங்களில் இருந்து வந்த 5 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமிட்டன. மழை சற்று ஓய்ந்த பிறகு இந்த விமானங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின.
அதேபோல் சென்னையில் இருந்து ஐதராபாத், டெல்லி, மதுரை, கவுகாத்தி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 8 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. திடீரென பெய்த இடி, மின்னலுடன் கூடிய கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
Related Tags :
Next Story