சென்னையில் 'விமான நிலைய காவல் ரோந்து திட்டம்' - காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்


சென்னையில் விமான நிலைய காவல் ரோந்து திட்டம் - காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்
x

சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய காவல் ரோந்து திட்டத்தை சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், பயணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் சேவைகளை வழங்கிடும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை, இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் சி.ஐ.எஸ்.எப். சார்பில் 'விமான நிலைய காவல் ரோந்து திட்டம்' இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக சிறப்பு பயிற்சி பெற்ற 10 காவலர்களுக்கு பேட்ஜ்களை அவர் வழங்கினார். இந்த காவலர்கள் சென்னை விமான நிலையத்தில் 2 பிரத்யேக ரோந்து வாகனங்கள், ஒரு பேட்டரி வாகனம் மற்றும் நவீன சாதனங்களுடன் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

மேலும் வயதான நபர்கள், வெளிநாட்டுப் பயணிகளுக்கு தேவைப்படும் விவரங்கள் மற்றும் உதவிகளை வழங்கவும், குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், பயணிகளின் உடைமைகளை பாதுகாக்கவும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.



Next Story