ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x

ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர்

வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கள் சார்பில் அண்ணா கலையரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார். ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் ஏழுமலை, நடைபாதை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் மாணிக்கம், உழைக்கும் பெண்கள் அமைப்பு மாவட்ட செயலாளர் சரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக ஏ.ஐ.டி.யு.சி. தேசியக்குழு உறுப்பினர் தேவதாஸ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட் தொழிலாளர்கள், மக்கள் நலனுக்கு எதிராகவும், நிதி மூலதனம் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் உள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பிற்கு உத்தரவு இல்லை. பட்ஜெட்டால் அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயரும் அபாயம், கல்வி மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் நிலை உள்ளது. மத்திய அரசின் பட்ஜெட் மக்கள் விரோத பட்ஜெட் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.


Next Story