ஏ.ஐ.டி.யு.சி. உள்ளாட்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. உள்ளாட்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் சிலம்புச்செல்வி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் தண்டபாணி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஒப்பந்த அரசாணைகளை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். ஏற்கனவே பணியாற்றும் தொழிலாளர்களை நீக்கி, புதிதாக பணி நியமனம் செய்யும் போக்கை கைவிட வேண்டும். ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 61 மாத பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமநாதன், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் சிவகுமார், ஜெயா மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.