அழகப்பா பல்கலைக்கழக அளவிலான கிரிக்கெட் போட்டி


அழகப்பா பல்கலைக்கழக அளவிலான கிரிக்கெட் போட்டி
x
தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

அழகப்பா பல்கலைக்கழக அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி சார்பில் அழகப்பா பல்கலைக்கழக அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான பவளவிழா ஆண்டு கோப்பை கிரிக்கெட் போட்டி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற போட்டி தொடக்க விழாவிற்கு அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் பெத்தாலெட்சுமி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி போட்டியை தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர் பாண்டியராஜன் வாழ்த்துரை வழங்கினார். அழகப்பா பல்கலைக்கழக உடற் கல்வியியல் துறை இயக்குனர் செந்தில்குமரன் முன்னிலை வகித்தார். போட்டி ஏற்பாடுகளை அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் அசோக்குமார் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story