அலைேமாதிய பயணிகள் கூட்டம்


அலைேமாதிய பயணிகள் கூட்டம்
x

பயணிகள் கூட்டம் அலைமோதியது.

திருச்சி

திருச்சி:

இன்று பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த மே மாதம் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர் கோடை விடுமுறையையொட்டி தங்களது உறவினர்கள் வீடுகள், கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலா தலங்கள் மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்றனர். மேலும் பலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.

இந்த நிலையில் கோடை விடுமுறை நேற்றுடன் முடிந்த நிலையில் இன்று(திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையடுத்து சொந்த ஊருக்கு வந்த பலர் தாங்கள் பணிபுரியும் இடத்திற்கும், மாணவர்கள் தாங்கள் படிக்கும் பகுதிக்கும் நேற்று திரும்பி சென்றனர். குறிப்பாக திருச்சியில் இருந்து மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் சென்னை, வேலூர், கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஏராளமானோர் சென்ற வண்ணம் இருந்தனர்.

கூடுதல் பஸ் இயக்கம்

இதன் காரணமாக திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், ரெயில் நிலையம் ஆகியவற்றில் வழக்கத்தைவிட அதிக அளவில் பயணிகள் கூட்டம் இருந்தது. முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டதால் பலர் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க வரிசையில் காத்திருந்தனர்.

இந்த நிலையில் பயணிகள் தனியார் பஸ்களை நாடியதால் அவர்கள் பஸ் கட்டணத்தை கூடுதலாக வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் திருச்சி மத்திய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனை கருத்தில் கொண்டு இது போன்ற நேரத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மேலும் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் மற்றும் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story