ஆலங்குளம் யூனியன் அலுவலக புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா
ஆலங்குளம் யூனியன் அலுவலக புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
ஆலங்குளம்:
2020 - 2021-ம் வருட ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானிய நிதி திட்டத்தின் கீழ் ஆலங்குளம் யூனியன் அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.3.46 கோடி ஒதுக்கப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அசன் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைத்தனர்.
விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தசாரதி, திலகராஜ், ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் ஹெல்வின், பூச்செண்டு, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், மருதம்புத்தூர் பஞ்சாயத்து தலைவர் பூசைத்துரை, குத்தப்பாஞ்சான் பஞ்சாயத்து தலைவர் ஜெயராணி குமார், அரசு ஒப்பந்ததாரர் மாரித்துரை, தொழிலதிபர் மணிகண்டன் மற்றும் அலுவலக பணியாளர்கள், தி.மு.க. கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.