தீர்த்த குளத்தில் பாசி அகற்றும் பணி
அரூர் வர்ணீஸ்வரர் கோவில் தீர்த்த குளத்தில் பாசி அகற்றும் பணி நடைபெற்றது.
தர்மபுரி
அரூர்:
அரூர் பஸ் நிலையம் அருகில் வர்ணீஸ்வரர் கோவில் வளாகத்தில் பக்தர்கள் புனித நீராடுவதற்காக உள்ளது. இந்த குளம் பராமரிப்பின்றி சாக்கடை கழிவுநீர் நிரம்பி பாசி படர்ந்து பச்சை நிறத்தில் இருந்தது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசிவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இந்த குளத்தை தூர்வாரி, படிக்கட்டுகள் அமைத்தல், சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.18 லட்சம் மதிப்பில் கோவில் தீர்த்த குளம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று கோவில் குளத்தில் இருந்த பாசியை உழவார பணி சிவனடியார்கள் தூய்மை செய்யும் பணியை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story