கச்ச நத்தம் கொலை வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள்: நீதிமன்றம் அதிரடி


கச்ச நத்தம் கொலை வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள்: நீதிமன்றம் அதிரடி
x
தினத்தந்தி 1 Aug 2022 7:40 PM IST (Updated: 1 Aug 2022 7:50 PM IST)
t-max-icont-min-icon

கச்ச நத்தம் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் 3 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கானது சிவகங்கை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கும் குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பளித்தது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் 3 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story