பள்ளி பேருந்து ஓட்டையில் விழுந்து மாணவி பலியான வழக்கில் அனைவரும் விடுதலை - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு


பள்ளி பேருந்து ஓட்டையில் விழுந்து மாணவி பலியான வழக்கில் அனைவரும் விடுதலை - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
x

மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளியின் தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சென்னை,

கடந்த 2012-ம் ஆண்டு தாம்பரம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த 6 வயதான ஸ்ருதி என்ற மாணவி, பள்ளி முடிந்து பேருந்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டையில் விழுந்து உயிரிழந்தார்.

தமிழ்நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட மொத்தம் 8 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக செங்கல்பட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த சம்பவம் நடப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்பு தான் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில், 10 ஆண்டுகளுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story