போட்டி தேர்வுகள் அனைத்தும் தமிழ் மொழியில் நடத்த வேண்டுகோள்


போட்டி தேர்வுகள் அனைத்தும் தமிழ் மொழியில் நடத்த வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 Feb 2023 6:47 PM GMT (Updated: 2023-02-13T15:22:53+05:30)

போட்டி தேர்வுகள் அனைத்தும் தமிழ் மொழியில் நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பெரம்பலூர்

மாவட்டந்தோறும் தமிழ் மருத்துவக்கல்லூரியை தனித்துறையாக நிறுவிட வேண்டும். தமிழக அரசு பணி, மத்திய அரசு, தனியார் நிறுவனப்பணி எதுவாயினும், தமிழ் வழிக்கல்வி படித்தோருக்கு முன்னுரிமையில் வேலை வழங்க வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அனைவரும் அரசு பள்ளியில் மட்டுமே படிக்க சட்டம் இயற்ற வேண்டும். 1956-ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். 1976-ம் ஆண்டு மத்திய அரசு பறித்து கொண்ட தமிழ்நாட்டு கல்வியை பொதுப்பட்டியலில் கொடுக்க வேண்டும். மழலைக்கல்வி முதல் மருத்துவம், பொறியியல், சட்டம், ஆய்வுக்கல்வி வரை தமிழ் வழியிலே கொடுக்க வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சாதி மறுப்பாளர் என்று சான்று வழங்கி உடனே அரசு பணி வழங்கவும், அவர்களுடைய குழந்தைகளுக்கு சாதியற்றவர் என்று சான்றும் வழங்க வேண்டும். போட்டி தேர்வுகள் அனைத்தையும் தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ் வழிக்கல்வி இயக்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story