அகில இந்திய வானொலி செய்தி வாசிப்பாளார் சரோஜ் நாராயணசாமி மறைவு: முதல் அமைச்சர் இரங்கல்


அகில இந்திய வானொலி செய்தி வாசிப்பாளார் சரோஜ் நாராயணசாமி மறைவு: முதல் அமைச்சர் இரங்கல்
x

அகில இந்திய வானொலி செய்தி வாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயண்சாமி மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியாவில் 75 முதல் 90 வரையிலான காலகட்டத்தில் அகில இந்திய வானொலியில் ஒலித்த தமிழ் செய்திகளின் குரலுக்கு சொந்தக்காரர் சரோஜ் நாராயணசாமி நேற்று (ஆகஸ்ட் 13) உடல் நலக் குறைவால் காலமானார்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்றாட செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து சரோஜ் நாராயண்சாமியின் குரல் நின்றுவிட்டது என கூறியுள்ளார். சரோஜ் நாராயண் குரல் நின்றதை அறிந்து மிகுந்த வேதனை அடைவதாகவும் முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Next Story