'தி.மு.க.ஆட்சியில் அனைத்து தொழில்களும் முடங்கிவிட்டன'-சிவகாசி பொதுக்கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு


தி.மு.க.ஆட்சியில் அனைத்து தொழில்களும் முடங்கிவிட்டன-சிவகாசி பொதுக்கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 27 Oct 2023 12:15 AM IST (Updated: 27 Oct 2023 12:18 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சியில் அனைத்து ெதாழில்களும் முடங்கிவிட்டன என்று சிவகாசி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.

விருதுநகர்

சிவகாசி,

பொதுக்கூட்டம்

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் அ.தி.மு.க. கட்சியின் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மணிகண்டன் தலைமை தாங்கினார். மரியதாஸ், தினேஷ், சகுந்தலா திருப்பதி, செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்துராஜ், நிர்மல் ஆகியோர் வரவேற்று பேசினர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

சிவகாசி பகுதியின் வாழ்வாதாரம் பட்டாசு தொழில் தான். அந்த தொழிலை காப்பாற்ற அ.தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இந்த தொழிலை காப்பாற்ற தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பட்டாசு தொழில் பாதுகாப்பு பேரவை தொடங்கப்பட்டு போராட்டம் நடத்தப்படும்.

அனைத்து தொழில்களும் முடக்கம்

தி.மு.க. ஆட்சியில் அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளது. ஏழை மக்கள் அதிக அளவில் ஈடுபட்டு வரும் பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றால் வருகிற நாடாளுமன்ற தேர்தலின் போது பொதுமக்கள் அ.தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். எடப்பாடி பழனிசாமி அடையாளம் காட்டுபவர் தான் பிரதமராக வருவார். அல்லது எடப்பாடி பழனிசாமியே பிரதமராக வருவார். குறைந்த எண்ணிக்கையில் எம்.பி.களை வைத்திருந்த பலர் இந்தியாவின் பிரதமராக இருந்த வரலாறு உள்ளது. இதை யாரும் மறுக்கவும், மறக்கவும் முடியாது. காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி இந்தியா கூட்டணி அல்ல, அது இத்தாலி கூட்டணி.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் காவேரி, தீக்கனல் லட்சுமணன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், முன்னாள் யூனியன் தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பலராம், ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வெங்கடேசன், லயன் லட்சுமிநாராயணன், கார்த்திக், சங்கர், இளநீர் செல்வம், பட்டாசு கருப்பசாமி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கண்ணன் நன்றி கூறினார்.

பொதுக்கூட்ட ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் விசுநத்தம் ஆரோக்கியராஜ் செய்திருந்தார்.


Related Tags :
Next Story