அனைத்துக் கட்சி கொடி கம்பங்களை அகற்ற வேண்டும்


அனைத்துக் கட்சி கொடி கம்பங்களை அகற்ற வேண்டும்
x

அனைத்துக் கட்சி கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என குடியாத்தம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேலூர்

குடியாத்தம் ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், எஸ்.சாந்தி, ஒன்றியக் குழு துணைத் தலைவர் கே.கே.வி.அருண்முரளி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் உத்தரகுமாரி, ஒன்றிய பொறியாளர் புவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வநாதன் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.

அப்போது ராமாலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்த வேண்டும், ராமாலை பகுதியில் வீட்டுமனை பட்டா பெற்ற ஏழை எளியவர்கள் அதில் வீடு கட்டவில்லை என பட்டாவை ரத்து செய்து வேறு நபர்களுக்கு வழங்கி உள்ளனர். மீண்டும் அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மேல்ஆலத்தூர், நத்தமேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மழைக்காலங்களில் வகுப்பறைகளில் மழைநீர் ஒழுகுவதை சரிசெய்ய வேண்டும். என பேசினா்.

உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளத்து பேசிய தலைவர் என்.இ. சத்யானந்தம் ராமாலை கிராமத்தில் பட்டா ரத்து செய்த பிரச்சினை குறித்து உடனடியாக உயரதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று மீண்டும் பட்டா வழங்கவும், ஏரிக்கரையை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும், பழுதடைந்த பள்ளிகள் குறித்து கணக்கெடுத்து கலெக்டருக்கு அனுப்பி உள்ளோம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வெளியே பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் உள்ளன. இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடை அமைக்க வேண்டும், அனைத்து கட்சியின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story