அரியலூர் மாவட்டத்தில் அனைத்து தனியார் பள்ளிகளும் நாளை இயங்கும்: ஆட்சியர் அறிவிப்பு


அரியலூர் மாவட்டத்தில் அனைத்து தனியார் பள்ளிகளும் நாளை இயங்கும்: ஆட்சியர் அறிவிப்பு
x

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் நாளை இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்துவந்த 12-ம் வகுப்பு மாணவி விடுதியில் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய பெற்றோருக்கு, பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பள்ளி முன்பு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து சூறையாடினர். இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு செயலாளர் நந்தகுமார் கூறியிருப்பதாவது, இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சமூக விரோதிகள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி பள்ளிக்குள் புகுந்து பள்ளி வாகனங்களை தீக்கிரையாக்கி இருக்கிறார்கள். ஏறக்குறைய பள்ளிக்கு ரூ.50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து நாளை முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் தனியார் பள்ளிகள் ஈடுபட உள்ளது. பள்ளிகள் நடக்காது, என்று கூறினார்.

இந்த நிலையில் தனியார் பள்ளிகள் இதுபோல் விடுமுறை விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் அனைத்து தனியார் பள்ளிகளும் நாளை இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். மேலும், நாளை இயங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story