கரூர் மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளையும் உரிய நேரத்தில் திறக்க வேண்டும்


கரூர் மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளையும் உரிய நேரத்தில் திறக்க வேண்டும்
x

கரூர் மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளையும் உரிய நேரத்தில் திறக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

கரூர்

கரூா்

மாதாந்திர ஆய்வுக்கூட்டம்

கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் கூட்டுறவு துறையின் சார்பாக ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கலந்துகொண்டு பல ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடந்து அதை மேலும் சிறப்பாக செய்திடவேண்டும். அனைத்து ரேஷன் கடைகளும் உரிய நேரத்தில் திறக்கப்பட வேண்டும்,ரேஷன் கடையில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் இருப்பினை இருப்பு பலகையில் தினந்தோறும் எழுதிட வேண்டும், கடைகளில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும், தரமான அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு வினியோகிக்க வேண்டும், பழைய பொருட்களை கடைகளில் இருப்பு வைத்திருக்கக் கூடாது, முன்னதாக வந்த பொருட்களை முதலில் விற்பனை செய்திட வேண்டும்.

நல்ல நிர்வாகிகளாக...

ரேஷன் கடைகளுக்கு பலதரப்பட்ட மக்கள் பலதரப்பட்ட கருத்து மற்றும் மனநிலையில் வருவார்கள். நீங்கள் மக்கள் சேவகர்களாக, அரசு ஊழியராக, படியளக்கும் இடத்தில் இருப்பவராக செயல்பட வேண்டும். நீர்வளத்துறை, விவசாயத்துறை கொள்முதல் என பல்வேறு துறைகளுக்கு பிறகு உணவு பொருட்கள் கடைசியாக உங்கள் கைக்கு வருகிறது.அதை நீங்கள் சிறப்பாகவும், பொறுப்பாகவும் வினியோகிக்க வேண்டும். நீங்கள் நுகர்வோராக இருந்தால் என்ன எதிர்பார்ப்பீர்களோ அதேபோல் உங்கள் கடைக்கு வரும் நுகர்வோர்களிடம் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் விற்பனையாளர்கள் என்பதை தாண்டி நல்ல நிர்வாகிகளாக இருந்து கடைகளை நிர்வகிக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story