அனைத்துத்துறை ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அனைத்துத்துறை ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

ராணிப்பேட்டையில் அனைத்துத்துறை ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

மாவட்ட துணைத்தலைவர் ஜெயகோபி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தேவராஜ் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயது பூர்த்தியானவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையை ரூ.7,850 ஆக வழங்க வேண்டும்,

மருத்துவ செலவுத்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் மாநில பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஜெயகுமார், ஜோசப் கென்னடி, பாபு மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story