அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநாடு


அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநாடு
x
தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநாடு நடைபெற்றது.

சிவகங்கை


தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க சிவகங்கை மாவட்ட மாநாடு சிவகங்கை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வடிவேலு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் சங்கரநாராயணன் கொடியேற்றினார். கிருஷ்ணகுமார் வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் பவுன்தாய் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட துணை தலைவர் மெய்யப்பன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.

மாநில செயலாளர் சந்திரசேகரன், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்றோர் மின் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆகியோர் பேசினா்.

கூட்டத்தில் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாவட்ட துணை தலைவர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story