அனைவரும் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும்


அனைவரும் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும்
x

அனைவரும் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

அனைவரும் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகை மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க கடந்த 1-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு(2023) மார்ச் மாதம் 3-ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்

ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதன் மூலம் ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விவரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்க்க முடியும்.

அனைவரும் இணையதளம் மூலமும் ஆதார் எண்ணணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க முன் வர வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் இதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம்.

100 சதவீதம்

இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தினை எவ்வித தொய்வுமின்றி 100 சதவீதம் செயல்படுத்திட அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாணவர்களுக்கு 17 வயது பூர்த்தியானவுடன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட இந்திய தேர்தல் ஆணையம் வசதி செய்துள்ளது.

எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட 18 வயது பூர்த்தியாகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் உதவி கலெக்டர் முருகேசன், தாசில்தார்கள் கார்த்திகேயன் (நாகை), சாந்தி (தேர்தல்), கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story