எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர்; ஆர்.எஸ்.பாரதி ஆதங்கம்


எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர்; ஆர்.எஸ்.பாரதி ஆதங்கம்
x
தினத்தந்தி 3 Dec 2022 8:07 PM IST (Updated: 3 Dec 2022 8:20 PM IST)
t-max-icont-min-icon

எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை,


சென்னை ஆர்.எஸ் புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது; எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர். ஒரே கொடி, ஒரே கட்சி என இருந்ததால் பதவி கிடைக்கவில்லை .

உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்காமல், உழைக்காதவர்கள் பதவியில் வந்து உட்கார்ந்து உள்ளனர். எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர். கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதாக பதவி கிடைக்காது; அதை ஜீரணித்துக் கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும்" என்று பேசினார்.


Next Story