மயிலாடுதுறையில் அனைத்து ரெயில்களும் இயங்கும்-ரெயில்வே


மயிலாடுதுறையில் அனைத்து ரெயில்களும் இயங்கும்-ரெயில்வே
x

கோப்பு படம்

மயிலாடுதுறையில் அனைத்து ரெயில்களும் இயங்கும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் நேற்று தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 4 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மயிலாடுதுறையில் இருந்து திருச்சி, விழுப்புரம் செல்லும் ரெயில்கள் உட்பட 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் திருவாரூர் வழியாக மாற்றுப்பாதையில் செல்லும் எனவும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் பராமரிப்பு பணிகள் முடிந்துவிட்டதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பணிகள் முடிந்துவிட்டதால் மயிலாடுதுறை வழியே செல்லும் அனைத்து ரெயில்களும் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story