அனைத்து வகை மாற்றுத்திறனாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அனைத்து வகை மாற்றுத்திறனாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

அனைத்து வகை மாற்றுத்திறனாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளர்கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மனோகரன், கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஜோதிபாசு, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன், மாமன்ற உறுப்பினர் தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காதுகேளாதோர், வாய்பேசாதோர் புரிந்து கொள்ள கூடிய வகையில் அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர் அலுவலகம், காவல்துறை அலுவலகம், மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் அனைத்து அலுவலகம், பொது இடங்களில் சைகை மொழி பெயர்ப்பாளரை உடனடியாக நியமிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் காதுகேளாத, வாய்பேசாத மாற்றுத்திறனாளிகள் தொகுப்பு ஊதியத்தில் வேலை பார்ப்பவர்களை அரசாணைபடி உடனடியாக நிரந்தர பணி அமர்த்த வேண்டும். அரசு பணிகளில் காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோருக்கு 1 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


Next Story