வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி? டி.டி.வி.தினகரன் பதில்


வரும் தேர்தலில் யாருடன்  கூட்டணி? டி.டி.வி.தினகரன் பதில்
x

பாரத பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம்பெறும் என்றும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதில் இருந்து, அந்த கூட்டணியில் இடம்பெறப் போகும் கட்சிகள் குறித்த யூகங்கள் அதிகரித்து வருகின்றன. ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் பாஜக கூட்டணியில் இணைவார்கள் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன் கூருகையில், 'வரும் தேர்தலில் பாரத பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம்பெறும் என்றும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும்" டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரனின் இந்த பேச்சு, அமமுக வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்ற யூகங்களுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. அதேபோல், டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என்று அறிவித்துள்ள முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் அணியும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் பெறக்கூடும் என்று சொல்லப்படுகிறது.


Next Story